பள்ளிகளில் விரைவாக சான்றிதழ் அமைச்சர் அறிவுரை
பள்ளிகளில் விரைவாக சான்றிதழ் அமைச்சர் அறிவுரை
பள்ளிகளில் விரைவாக சான்றிதழ் அமைச்சர் அறிவுரை
ADDED : ஆக 05, 2011 02:43 AM
சென்னை : ஜாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வருமான சான்றிதழ் உள்ளிட்டவற்றை அந்தந்த பள்ளிகளிலேயே விரைவாக வழங்க வேண்டுமென, அதிகாரிகளிடம், அமைச்சர் தங்கமணி வலியுறுத்தினார்.
பட்டா மாறுதல், முதியோருக்கான உதவித் தொகை போன்றவற்றை வழங்கும் முறையை எளிமையாக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். மேலும், பள்ளியில் படிக்கும் மாணவர்கள், கல்லூரிகளில் விரைவாக சேர வசதியாக, அவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்று, இருப்பிட சான்று, வருமானச் சான்று உள்ளிட்டவைகளை அந்தந்த பள்ளிகளிலேயே, தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பித்து, பள்ளிகள் மூலமே பெற்றுக் கொள்ளலாம் என்றும் முதல்வர் கூறியிருந்தார். இவற்றை விரைவாக செயல்படுத்துவது குறித்து, வருவாய்த் துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், 40 வருவாய் கோட்டாட்சியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அமைச்சர் தங்கமணி பேசும் போது, ''பட்டா மாறுதல் உத்தரவுகள் வழங்க, விரைவு பட்டா மாறுதல் திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். இதன் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். குறிப்பாக, முதியோர் உதவித் தொகைக்காக பெறப்படும் மனுக்களை உடனே பரிசீலித்து தகுதியானவர்களுக்கு உரிய உத்தரவையும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்குத் தேவையான ஜாதிச் சான்று, வருமான சான்று, இருப்பிடச் சான்று போன்றவற்றை அந்தந்த பள்ளிகள் மூலமாக பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.