பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது : சிறுமி வழக்கில் தினமும் திருப்பங்கள்
பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது : சிறுமி வழக்கில் தினமும் திருப்பங்கள்
பெண்களை கடத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் கைது : சிறுமி வழக்கில் தினமும் திருப்பங்கள்

ராமநாதபுரம் : மதுரை திருமங்கலம் சிறுமியைக் கடத்திச் சென்று, இரண்டரை ஆண்டுகளாக விபச்சாரத்தில் ஈடுபடுத்திய வழக்கில், மதுரையில் இருந்து சிறுமி உட்பட பெண்களைக் கடத்தி வந்து, ராமநாதபுரத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் புரோக்கர் பிரியா கைது செய்யப்பட்டார்.
மதுரை திருமங்கலம் அருகே வாகைக்குளத்தைத் சேர்ந்த சிறுமி ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த இரண்டரை ஆண்டுகளாக விபச்சாரக் கும்பலிடம் சிக்கி, சின்னாபின்னமானார்.
சிறுமியைக் காப்பாற்றுவதாகக் கூறிய தொண்டு நிறுவன ஊழியர் ரைசுதீன், வசந்தம் லாட்ஜ் உரிமையாளர் சுப்பிரமணியம், திருப்பரங்குன்றம் செல்வி, மதுரை திருமங்கலம் துரைராஜ், ராமநாதபுரம் பாஸ் ஓட்டல் ஊழியர்களான கீழக்கரை ராமகிருஷ்ணன், மண்டபம் சரவணக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஜலீல் உட்பட முக்கிய பிரமுகர்கள் பலரைத் தேடி வருகின்றனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய, ராமநாதபுரம் பாரதி நகரில் பியூட்டி பார்லர் நடத்தி வந்த ஹேமா, பிரியா ஆகியோரை, போலீசார் விடிய, விடிய தேடினர். இதில் ஹேமா தப்பி விட்டார்.
விபச்சார புரோக்கரான ஓம்சக்தி நகரைச் சேர்ந்த பிரியாவை, நேற்று மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பாள் கைது செய்தார். இவர் மதுரையில் இருந்து பெண்களை அழைத்து வந்து, ராமநாதபுரத்தில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது, விசாரணையில் தெரியவந்தது. பின், ராமநாதபுரம் ஜே.எம்.1 கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். மாஜிஸ்திரேட் பாஸ்கரன் உத்தரவுப்படி, பிரியா திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.