/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/வழி கொடுக்காததால் தாக்குதல் ஐவர் படுகாயம்: 6 பேர் கைதுவழி கொடுக்காததால் தாக்குதல் ஐவர் படுகாயம்: 6 பேர் கைது
வழி கொடுக்காததால் தாக்குதல் ஐவர் படுகாயம்: 6 பேர் கைது
வழி கொடுக்காததால் தாக்குதல் ஐவர் படுகாயம்: 6 பேர் கைது
வழி கொடுக்காததால் தாக்குதல் ஐவர் படுகாயம்: 6 பேர் கைது
ADDED : ஆக 09, 2011 01:35 AM
கும்பகோணம்: நாச்சியார்கோவில் அருகே வழி கொடுக்கவில்லை என்று வேனில்
வந்தவர்களை தாக்கிய ஆறுபேரை போலீஸார் கைது செய்தனர்.தஞ்சாவூர் அருகே உள்ள
ஆலக்குடி பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சீனிவாசன் என்பவரது மகன்
சதீஷ்குமார்(33). இவர் தனது குடும்பத்தாருடன் நாச்சியார்கோவிலில் உள்ள
குலதெய்வம் கோவிலுக்கு வேனில் வந்து சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பிக்
கொண்டிருந்தார்.அப்போது வேனின் பின்னால் வந்த வண்டிக்கு வழிகொடுக்கவில்லை
என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நாச்சியார்கோவில்
வேப்பங்குளத்தெருவை சேர்ந்த சுமன், பிரவீன், சுரேஷ், கார்த்தி,
ரவீந்திரன், ஏசு ஆகியோர் வேனின் முன்னே தாங்கள் வந்த காரை நிறுத்தி வழி
மறித்தார்கள். வேனில் இருந்தவர்களை சைக்கிள் செயின் மற்றும் கிரிக்கெட்
மட்டை கொண்டு தாக்கினார்கள்.
இதில் தலை, முகம் என படுகாயம் அடைந்த உதயகுமார், வரதராஜன், மார்கண்டேயன்,
சுதாகர், சதீஷ்குமார் ஆகிய ஐந்து பேர்களும் நாச்சியார்கோவில் அரசு
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சதீஷ்குமார் கொடுத்த
புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சுமன்,
பிரவீன், சுரேஷ், கார்த்தி, ரவீந்திரன், ஏசு ஆகிய ஆறுபேரையும் கைது
செய்தனர்.


