Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு அரசுக்கு கொ.மு.க., பாராட்டு

சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு அரசுக்கு கொ.மு.க., பாராட்டு

சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு அரசுக்கு கொ.மு.க., பாராட்டு

சாயக்கழிவு பிரச்னைக்கு தீர்வு அரசுக்கு கொ.மு.க., பாராட்டு

ADDED : ஜூலை 30, 2011 01:26 AM


Google News
திருப்பூர் : ''முதல்வரின் நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், கொங்கு நாட்டில் நீண்டகாலமாக நிலவும் ஜவுளித்தொழில் பிரச்னைகளும், விவசாயிகளின் பாதிப்புகளும் தவிர்க்கப்பட்டு, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர்,'' என்று கொ.மு.க., மாநில தலைவர் பெஸ்ட் ராமசாமி பாராட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கொங்கு நாட்டின் வாழ்வாதாரமாகவும், பிரதான தொழிலாகவும் விவசாயமும், ஜவுளித்தொழிலும் உள்ளன. அவற்றின் மூலமாக லட்சக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெறுகின்றனர். ஜவுளித்தொழிலின் ஆதாரமாக விளங்கும் சாயத்தொழிலில், கழிவுநீர் சுத்திகரிப்பு பெரிய சவாலாக உள்ளது. சாயக்கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு காண, சரியான தொழில்நுட்பத்தை அமைக்க, 200 கோடி ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிடப்பட்டுள்ளார். அவரது நடவடிக்கைகளை கொ.மு.க., வரவேற்பதோடு, முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரின் இந்நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், கொங்கு நாட்டில் நீண்டகாலமாக நிலவிவரும் ஜவுளித் தொழில் பிரச்னைகளும், விவசாயிகளின் விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளும் தவிர்க்கப்படும்; அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர். சாயப்பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில், போராட்ட அறிவிப்புகளை திரும்ப பெற வேண்டும். திருப்பூர் தொழில் பாதுகாப்பு குழு மற்றும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 4, 5ம் தேதி வேலை நிறுத்தம், கடையடைப்பு போராட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்று கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us