/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/குண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைதுகுண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைது
குண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைது
குண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைது
குண்டர் சட்டத்தில் ரவுடி அதிரடி கைது
ADDED : செப் 17, 2011 01:13 AM
கும்பகோணம்: கும்பகோணத்தில் சமூக விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த ரவுடியை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கும்பகோணம் அருகே தாராசுரம் எலுமிச்சங்கா பாளையம் அம்பேத்கர் நகரில் வசிப்பவர் தங்கையன் மகன் மூர்த்தி (29). இவர் கடந்த 15 ஆண்டுக்கும் மேலாக தொடர்ந்து வழிப்பறி, கொள்ளை, மற்றும் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்தார். கூலிப்படை, கொலை கும்பலில் இருந்ததால் 5க்கும் மேற்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் இவர் மீது வழக்குகள் உள்ளன. இதனால் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென தஞ்சை எஸ்.பி., அனில்குமார் கிரி, டி.எஸ்.பி., சிவபாஸ்கர் ஆகியோர் தஞ்சை கலெக்டர் பாஸ்கரனுக்கு பரிந்துரைத்திருந்தார். இதையடுத்து மூர்த்தியை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பினர்.