ADDED : ஆக 14, 2011 05:55 PM
ஷிம்லா: காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த நடன கலைஞர்களை ஏற்றிக்கொண்டு வந்த பேருந்து மலையிடுக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 15 பேர் பலியானார்கள். 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இமாச்சல் பிரதேச மாநிலம் லஹாவுல் -ஸ்பிடி மாவட்டத்தின் காமூர் என்ற இடத்தில் நடந்தது. பலியான அனைவரின் உடல்கள் மீட்கட்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.