/உள்ளூர் செய்திகள்/மதுரை/போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலை ஊர்வலம்
ADDED : செப் 01, 2011 02:09 AM
மதுரை : பா.ஜ., சிவசேனா கட்சிகள், விஸ்வ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் திருப்பரங்குன்றம், மேலூர், சமயநல்லூர், சோழவந்தான், சிலைமான், கருப்பாயூரணி, பேரையூர், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் செப்.,4 வரை, போலீஸ் பாதுகாப்புடன் 248 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன.
வழிபாடு நடத்துவதற்காக போலீஸ் அனுமதியுடன் கோயில் வாசல்கள், முக்கிய இடங்களில் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. சிலை ஒன்றுக்கு இரண்டு போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர். ரோந்து போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். போலீஸ் அனுமதியின்றி சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்ல இயலாது.