ADDED : ஆக 26, 2011 12:59 AM
அரூர்: அரூர், ஸ்ரீநிவாசா இன்ஜினியரிங் கல்லூரியில், முதலாம் ஆண்டு துவக்க
விழா நடந்தது.
ஸ்ரீநிவாசா கல்வி அறக்கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும்
கல்லூரியில், நடந்த விழாவுக்கு அறக்கட்டளை கவுரவத் தலைவர் பேராசிரியர்
இளங்கோவன் தலைமை வகித்தார். தலைவர் ரேவதி குத்துவிளக்கு ஏற்றி வைத்து
விழாவை துவக்கி வைத்தார். இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் கருணாநிதி
வரவேற்றார். தமிழ்நாடு மின் வாரிய சேலம் மாவட்ட தலைமை கண்காணிப்பு
பொறியாளர் சுந்தரேஷன், மேச்சேரி தி காவேரி கல்வி நிறுவனங்களின் டீன்
பேராசிரியர் ஓப்ளி, மின் வாரிய இயக்க பொறியாளர் செந்தில்வேலவன், ஸ்ரீநிவாசா
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் மோகன் ஆகியோர் பேசினார். சிறப்பு
விருந்தினர்களுக்கு அறக்கட்டளை பொருளாளர் வசந்தாநைநாமலை பரிசு வழங்கினார்.
அறக்கட்டளை இணை செயலாளர் சிவகாமி அன்பழகன், நன்றி தெரிவித்தார். ஏற்பாடுகளை
கல்லூரி நிர்வாக அலுவலர் அரசு செய்தார்.