/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/ரேஷன் குறைதீர் நாள் கூட்டம் செப்.,9ல் துவக்கம்: கலெக்டர்ரேஷன் குறைதீர் நாள் கூட்டம் செப்.,9ல் துவக்கம்: கலெக்டர்
ரேஷன் குறைதீர் நாள் கூட்டம் செப்.,9ல் துவக்கம்: கலெக்டர்
ரேஷன் குறைதீர் நாள் கூட்டம் செப்.,9ல் துவக்கம்: கலெக்டர்
ரேஷன் குறைதீர் நாள் கூட்டம் செப்.,9ல் துவக்கம்: கலெக்டர்
ADDED : செப் 01, 2011 01:30 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் பொருட்கள் வாங்குவதில் நிலவிவரும் இடர்பாடுகளை சரிசெய்யும் விதமாக தாலுகா தோறும் 9ம் தேதி குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுவினியோகத்திட்டத்தில் நிலவிவரும் குறைபாடுகளை சரிசெய்து ரேஷன் பொருட்கள் விநியோகத்தை முறைபடுத்தும் விதமாக தாலுகா தோறும் வரும் 9ம் தேதி காலை 10 மணி முதல் பகல் ஒருமணி வரை தொடர்புடைய வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
இதில் கூட்டுறவு சங்க தனி அலுவலர், பஞ்சாயத்து தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் நுகர்வோர் குழுக்களின் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.
புதுக்கோட்டை தாலுகாவில் அடப்பன்கார சத்திரம், ஆலங்குடி தாலுகாவில் கீழ கரும்பிரான்பட்டி, திருமயம் தாலுகாவில் துலையனூர், குளத்தூர் தாலுகாவில் மண்டையூர், இலுப்பூர் தாலுகாவில் திருவேங்கைவாசல், கந்தர்வக்கோட்டை தாலுகாவில் மங்கனூர், அறந்தாங்கி தாலுகாவில் கோவில்வயல், ஆவுடையார்கோவில் தாலுகாவில் கண்ணமங்கலம், மணமேல்குடி தாலுகாவில் ஏனாதி, பொன்னமராவதி தாலுகாவில் திருக்களம்பூர், கறம்பக்குடி தாலுகாவில் கலியராயன்விடுதி ஆகிய கிராமங்களில் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. ரேஷன் கடைகளின் செயல்பாடு மற்றும் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கூட்டத்தில் தெரிவித்து அவற்றை நிவர்த்தி செய்யலாம்.