காற்றாலை மின்சாரத்தின் தலைநகர்
காற்றாலைகளில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு சீராக இல்லாததால், தமிழகத்தில் மின்வெட்டு தவிர்க்க இயலாததாக உள்ளது.தமிழகத்தில் காற்றின் வேகம் குறைவாக இருக்கும்.
தகவல் சுரங்கம்
தலைநகரில் அருங்காட்சியகங்கள்
டில்லியில் உள்ளூர் டிராவல்சின் சுற்றுலா இடங்கள், பட்டியலில் உள்ள இடங்களை மட்டுமே பார்க்கின்றோம். இது தவிர பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே உள்ளன. இவை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உள்ளன.டில்லியில் விமான நிலையம் உள்ள பாலம் பகுதியில் விமானப்படை மியூசியம் உள்ளது. இதில் இந்திய விமானப்படையின் வரலாறு, விமானங்களின் கண்காட்சி, சாதனைகள் உள்ளன.காந்தியடிகளுக்கென மியூசியம் ராஜ்காட் பகுதியில் உள்ளது. காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட இடம் 'தீஸ் ஜனவரி மார்க்' சாலையில் உள்ளது. இந்த இடம் மத்திய அரசின் நேரடி மேற்பார்வையில் மியூசியமாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. டில்லியில் நேரு, இந்திரா தவிர, ஜாகீர் உசேனுக்கு ஒரு மியூசியம் ஜாமியா மில்லா இஸ்லாமியாவில் உள்ளது.