/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் உப்பளம் டென்னிஸ் மைதானம்சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் உப்பளம் டென்னிஸ் மைதானம்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் உப்பளம் டென்னிஸ் மைதானம்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் உப்பளம் டென்னிஸ் மைதானம்
சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வரும் உப்பளம் டென்னிஸ் மைதானம்
ADDED : ஆக 29, 2011 11:02 PM
புதுச்சேரி : உப்பளம் விளையாட்டரங்கில் உள்ள டென்னிஸ் மைதானம், புதர் மண்டி, சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது.
உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டரங்கில் ஹாக்கி, கால்பந்து, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுக்களுக்கு தனித் தனியாக மைதானங்கள் மற்றும் உள் விளையாட்டரங்கம் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடக்கிறது. மேலும், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்யவும் இந்த மைதானத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். விளையாட்டரங்கில் கடைசி மூலையில் டென்னிஸ் ஆடுகளம் அமைந்துள்ளது. இந்த ஆடுகளத்திற்கு அருகில் உள்ள பகுதிகளில் பராமரிப்பின்றி புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும், சமூக விரோதிகள் மது அருந்தும் இடமாகவும், குப்பைகள் கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது. பயன்படுத்தப்பட்ட சிரிஞ்ச் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளும், இப்பகுதியில் கொட்டப்படுவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது. புதர் மண்டிக் கிடக்கும் பகுதியை சிலர் திறந்த வெளி கழிப்பிடமாக உபயோகப்படுத்துவதால், துர்நாற்றம் வீசுகிறது. புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.