Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் சிறைவைப்பு:மந்திரி சிதம்பரம் செயலுக்கு எதிர்ப்பு

உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் சிறைவைப்பு:மந்திரி சிதம்பரம் செயலுக்கு எதிர்ப்பு

உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் சிறைவைப்பு:மந்திரி சிதம்பரம் செயலுக்கு எதிர்ப்பு

உண்ணாவிரதம் இருந்த காங்கிரசார் சிறைவைப்பு:மந்திரி சிதம்பரம் செயலுக்கு எதிர்ப்பு

ADDED : அக் 04, 2011 12:17 AM


Google News
சென்னை:''காரைக்குடி நகராட்சியில் 27 வார்டு வேட்பாளர்களுக்கு இடம் கிடைக்காததால், காங்கிரஸ் கொடியுடன் அ.தி.மு.க., விற்கு ஆதரவு அளித்து, பிரசாரத்தில் ஈடுபடபோவதாக,'' சத்தியமூர்த்தி பவனில் உண்ணாவிரதம் இருந்த சார்லஸ் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் சிதம்பரம் தொகுதியிலிருந்து, சத்தியமூர்த்தி பவன் வரை வந்த கோஷ்டி மோதல் பிரச்னை, பெரிய அளவில் எதிரொலித்தது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியிலுள்ள 36 வார்டுகளில், ஒன்பது வேட்பாளர்கள் மட்டும் காங்கிரசால் அங்கீகரிக்கப்பட்டவர்கள். மற்ற 26 வேட்பாளர்களுக்கும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் அளித்து, கை சின்னம் வழங்க வேண்டும் என்று, காரைக்குடி நகர அமைப்பு செயலர் காளிதாசன், இளைஞர் காங்கிரஸ் பார்லிமென்ட் பொதுச் செயலர் சார்லஸ், ஜான் கென்னடி, கணேஷ் ராஜ், வினோத், பஷீர் உட்பட ஐந்து பேர், ஞாயிறு இரவு 7 மணி முதல் நேற்று மாலை 3 மணி வரை சத்தியமூர்த்தி பவன் வாசலில் உண்ணாவிரதம் இருந்தனர். இதில், நேற்று காலை 9 மணி அளவில் சிதம்பரம் ஆதரவாளரான செல்வப்பெருந்தகை ஆட்கள், உள்துறை அமைச்சருக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கக் கூடாது என, சமரசம் கூறினர். சமரசத்திற்கு ஒத்துழைப்பு தராததால், அந்த ஐவரை பலவந்தப்படுத்தி, சத்தியமூர்த்தி பவன் இரண்டாவது மாடியில் உள்ள அறையில் அடைத்தனர்.இதுகுறித்து செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறும்போது, 'உள்துறை அமைச்சர் பெயரை களங்கப்படுத்த, சிவகங்கை மாவட்ட காங்கிரசார், சதி வேலையில் ஈடுபடுகின்றனர். நாங்கள் அவர்களை அடைத்து வைக்கவில்லை. பாதுகாப்பாக வைத்திருக்கிறோம்,' என்றார்.

உண்ணாவிரதம் இருந்த, சார்லஸ் கூறியதாவது:சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில், 36 வார்டுகள் உள்ளன. ஆனால், இதில் ஒன்பது வார்டுகளுக்கு மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். மற்ற 27 இடங்களுக்கு வேட்பாளர்களாக தி.மு.க.,வினர் அறிவிக்கப்பட்டனர். இதற்கு, சிவகங்கை மாவட்ட தலைவர் சுந்தரம் தான் காரணம். அவர், தன் உறவினர் பெண், தி.மு.க., சார்பில் போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவாக அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டுள்ளார்.இதற்கு, சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் ஆதரவாக உள்ளார். தி.மு.க., கூட்டத்தில் கார்த்திக் சிதம்பரம் ஆதரவு தெரிவித்த ஆதாரம் எங்களிடம் இருக்கிறது. இந்த நடவடிக்கைகள் உள்துறை அமைச்சருக்கு தெரியாமல் இருக்காது. எனவே, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

27 வார்டு வேட்பாளர்களுக்கு இடம் கொடுக்காததால் காங்கிரஸ் கொடியுடன் சென்று, அ.தி.மு.க.,விற்கு ஆதரவளித்து, ஓட்டளிக்க வேண்டும் என, மக்களிடத்தில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.இதுகுறித்து, தமிழக காங்கிரசில் பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில் மத்திய அமைச்சர் வாசன் ஆதரவாளர்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டிய விதம், சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள்துறை அமைச்சரின் சொந்த ஊரில் ஏற்பட்ட கட்சிக் குழப்பம், சத்தியமூர்த்தி பவனை நேற்று கலங்கடித்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us