/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/பாதாள சாக்கடை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கைபாதாள சாக்கடை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
பாதாள சாக்கடை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
பாதாள சாக்கடை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
பாதாள சாக்கடை பணிகளை விரைவுப்படுத்த கோரிக்கை
ADDED : செப் 16, 2011 12:05 AM
கிருஷ்ணகிரி: 'கிருஷ்ணகிரி நகரில், பாதாள சாக்கடை பணிகளை விரைவு படுத்த வேண்டும்' என்று ம.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் அசோக்குமார் நகராட்சி கமிஷனர் லோகநாதனிடம் மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள், ஆமை வேகத்தில் நடக்கிறது. நகரில், குழாய்கள் புதைக்க தோண்டிய பள்ளங்கள் மூடப்பட்டாமல் உள்ளது. இதனால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை பணிக்காக, தெருக்களில் ஜே.சி.பி., கொண்டு பள்ளம் தோண்டும்போது, பல இடங்களில் குடிநீர் இணைப்புகள் சேதமடைந்துள்ளது. இதனால், பல வீடுகளில் குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை பணிகளை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளம் தோண்டும் போது, பழுதான குடிநீர் இணைப்புகளை உடனடியாக சரிசெய்து தரவேண்டும்.


