/உள்ளூர் செய்திகள்/தேனி/அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மதுரை வீரன் காலனி மக்கள்அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மதுரை வீரன் காலனி மக்கள்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மதுரை வீரன் காலனி மக்கள்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மதுரை வீரன் காலனி மக்கள்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் மதுரை வீரன் காலனி மக்கள்
ADDED : செப் 06, 2011 10:44 PM
கோம்பை பேரூராட்சியில் உள்ள மதுரை வீரன் காலனியில், சுகாதார சீர்கேட்டால் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு குழந்தைகள் இறந்தனர்.
அதன் பிறகும் பேரூராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் பாராமுகமாகவே உள்ளன. இம்மக்கள் அடிப்படை வசதிகளுக்காக தொடர்ந்து ஏங்கும் நிலை உள்ளது. பேரூராட்சி 15 வது வார்டான, இக்காலனியில் ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இப்பகுதியில், பொது கழிப்பிடம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பொதுசுகாதார மையம், தெருவிளக்கு, மயானம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும், பேரூராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காமல் பாராபட்சம் காட்டுகிறது. தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் இப் பகுதியில், குடிசை மேம்பாட்டு திட்டப் பணிகளை கூட செய்யாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.பொதுமக்கள் சிலரின் கருத்து:லதா:கடந்த ஆண்டு, டெங்கு காய்ச்சல் பரவியதில், காலனியை சேர்ந்த லத்திகா என்ற பள்ளி மாணவி உட்பட இரண்டு பெண்குழந்தைகள் உயிரிழந்தனர். பல மாதங்களுக்கு ஒரு முறை சாக்கடை கால்வாய் தூர் வாரப்படுகிறது. தூர்வாரிய கழிவுகளை,அகற்றாமல் தெரு ஓரமாக குவித்து வைக்கின்றனர். இதனால் மீண்டும் அந்த கழிவுகள் சாக்கடைக்குள் விழுந்து விடுகின்றன. கூட்டுக்குடிநீர் குழாய்கள் முறையாக அமைக்கவில்லை. குடிநீர் இணைப்பில், கைவிசை பம்புகளை வைத்து தண்ணீர் பிடிக்கும் அவலம் உள்ளது.கோட்டையம்மாள்:பெண்களுக்கு சுகாதார வளாகம் இல்லை. இப்பகுதியை சேர்ந்த பெண்கள் அருகில் உள்ள காட்டாற்று ஓடைகளை உலர் கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். தனியாக செல்லும் பெண்களை, விஷமிகள் மொபைல் போனில் படம் பிடிக்கின்றனர். பேரூராட்சி வணிக வளாகத்தை ஒட்டியுள்ள காலியிடத்தில் சுகாதார வளாகம் கட்டினால் பெண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். பகலில் எரியும் தெருவிளக்குகள் இரவில் எரிவதில்லை. இதனால் தெருக்களில் நடமாட முடிவதில்லை.கண்ணன்: பல்லவராயன்பட்டி ஓடை அருகில் உள்ள குறுகிய இடத்தில், இறந்தவர்களை புதைக்கிறோம். போதிய இடவசதியில்லாததால், ஈமக்கிரியைகள் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. ரோடு வசதி இல்லாததால், மழைநேரத்தில் மயானப்பகுதிக்கு செல்ல முடிவதில்லை. முழுவதும் தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் இப்பகுதிக்கு, குடிசை மேம்பாட்டு திட்ட பணிகள் செய்வதில் பேரூராட்சி நிர்வாகம் பாராபட்சம் காட்டுகிறது. தரைநிலை தண்ணீர் தொட்டி அமைத்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க பல ஆண்டுகளாக கேட்டும் நடவடிக்கையில்லை.
நமது சிறப்பு நிருபர்