/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/வி.ஏ.ஓ.,க்கள் வராததால் காலியாக உள்ள அலுவலகங்கள்வி.ஏ.ஓ.,க்கள் வராததால் காலியாக உள்ள அலுவலகங்கள்
வி.ஏ.ஓ.,க்கள் வராததால் காலியாக உள்ள அலுவலகங்கள்
வி.ஏ.ஓ.,க்கள் வராததால் காலியாக உள்ள அலுவலகங்கள்
வி.ஏ.ஓ.,க்கள் வராததால் காலியாக உள்ள அலுவலகங்கள்
ADDED : ஆக 14, 2011 10:48 PM
காளையார்கோவில் : காளையார்கோவில் ஒன்றியத்தில் வி.ஏ.ஓ ., க்கள் கிராமங்களுக்கு வராமல் புறக்கணிப்பதால் கிராம மக்கள் சான்றிதழ் பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இங்கு நான்கு பிர்க்காக்களில் 60க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் உள்ளன. அனைவருக்கும் அரசு சார்பில் அலுவலக கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலானோர் அலுவலகத்தில் இருப்பதில்லை. காளையார்கோவில்,மறவமங்கலம், புலியடிதம்மம்,கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டையில் அறைஎடுத்து தங்கி 'கடமை ' செய்கின்றனர். கிராமங்களில் உள்ள அலுவலகங்கள் காட்சிப் பொருளாக உள்ளது. மாணவர்களுக்கு தேவையான சான்றிதழ், பட்டாமாறுதல், நில சர்வே,பிறப்பு, இறப்பு பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வி.ஏ.ஓ .,க்களை தேடி கிராமத்தினர் அலைகின்றனர்.சிலர் அறைகளிலும் இல்லாமல் மீட்டிங்,சொந்த வேலை என சென்று விடுவதால் கிராமத்தினர் பரிதவிக்கின்றனர். கிராமத்தினர் பயன்பெறும் வகையில் வி.ஏ.ஓ .,க்கள் அனைவரும் அவர்களது அலுவலகத்தில் தங்கி பணிபுரிய கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.