/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குடிநீர் கேட்டு பவானி மக்கள் சாலை மறியல்குடிநீர் கேட்டு பவானி மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பவானி மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பவானி மக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு பவானி மக்கள் சாலை மறியல்
ADDED : ஆக 11, 2011 11:52 PM
பவானி: பவானி அருகே கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பவானி, காலிங்கராயன் பாளையத்தில் இருந்து, கவுந்தப்பாடி செல்லும் வழியில் உள்ளது மூவேந்தர் நகர். வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதியான இங்கு, இலங்கை அகதிகள் 300 குடும்பங்களும் வசிக்கின்றனர். இப்பகுதியின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்ய, இரண்டு ஆழ்குழாய்களும், ஒரு மேல்நிலைத் தொட்டியும் உள்ளது. ஆழ்குழாய் மோட்டார்களில் ஒன்று எப்போதும் பழுதடைந்தே காணப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்த பொது மக்கள், எலவமலை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டனர்; எவ்வித பயனுமில்லை. நேற்று காலை, இப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர், பவானி - கவுந்தப்பாடி ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு யூனியன் பி.டி.ஓ., அசோகன், சித்தோடு இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்தனர். பொதுமக்களும் கலைந்து சென்றனர். அவர்கள் கூறுகையில், 'இப்பகுதியில் குடிநீர் மட்டுமின்றி, அங்கன் வாடி மையம், கழிப்பிட வசதி ஆகியவையும் இல்லை. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.