பஹல்காம் தாக்குதலுக்கு ஷாங்காய் அமைப்பு நாடுகள் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு ஷாங்காய் அமைப்பு நாடுகள் கண்டனம்
பஹல்காம் தாக்குதலுக்கு ஷாங்காய் அமைப்பு நாடுகள் கண்டனம்

பீஜிங்: ''பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்க முடியாது. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை கண்டிக்கிறோம்'' என மாநாட்டிற்கு பிறகு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.
சீனாவின் தியான்ஜினில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நேற்று துவங்கியது. இது இன்று நிறைவு பெற்றது. இந்த அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஈரான், பெலாரஸ் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட உலக நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர். சீனாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட நாடுகளின் தலைவர்கள் குழு படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) வெளியிட்டுள்ள அறிக்கை:
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் கடுமையாக கண்டிக்கின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக இரட்டை நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது.
பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் உறுப்பு நாடுகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில், '' பாகிஸ்தானில் நடந்த ஜாபர் எக்ஸ்பிரஸ் தாக்குதல், குஸ்தர் தாக்குதல் மற்றும் காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் ராணுவ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.