தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு மதிப்பூதியம்
தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு மதிப்பூதியம்
தேர்தல் பணியாற்றிய போலீசாருக்கு மதிப்பூதியம்
சிவகங்கை : தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து பிரிவு போலீசாருக்கும் மதிப்பூதியம் வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.தேர்தல் பணியை முறைப்படுத்துதல், அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்தல் பணியில் அதிரடிப்படை, ஆயுதப்படை போலீஸ், மத்திய ரிசர்வ் போலீஸ்,லோக்கல் போலீஸ், ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், '' தமிழகத்தில் தேர்தலின் போது சில இடங்களில் மட்டுமே சிறிய அளவில் பிரச்னைகள் ஏற்பட்டன. பெரிய அளவில் பிரச்னை ஏதுவும் ஏற்படாமல் பார்த்து கொண்டதில் போலீசாரின் பங்கு முக்கியமானது என்பதால், போலீசாருக்கும் அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல், மதிப்பூதியம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்காக தேர்தல் பணியில் ஈடுபட்ட போலீசாரின் விபரங்களை கணக்கெடுத்து அனுப்ப கமிஷன் உத்தரவிட்டுள்ளது,'' என்றார்.