ADDED : ஆக 28, 2011 11:26 PM
செஞ்சி :செஞ்சி ஒன்றிய குழு கூட்டத்தில் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பணிகளை தேர்வு செய்தனர்.
செஞ்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் சேர்மன் ரத்னா கணபதி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் உஷாராணி, சாந்தகுமாரி முன்னிலை வகித்தனர். இதில் 24 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பணிகளை தேர்வு செய்தனர். ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் தொழில் நிறுவனங்களிடம் வரி வசூல் செய்வது என தீர்மானம் நிறைவேற்றினர். இதன் பிறகு நடந்த விவாதத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர் லட்சுமிகாந்தன் அரசின் 100 சாதனையை பாராட்டி தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார். இதற்கு தி.மு.க., கவுன்சிலர் பச்சையப்பன் எதிர்ப்பு தெரிவித்தது, சமச்சீர் கல்வியை அமல் படுத்தியதற்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்றார். எந்த தீர்மானத்தையும் முன்னறிப்பு கொடுத்த பிறகே விவாதத்தில் எடுத்து கொள்ள முடியும் என சேர்மன் ரத்னா கணபதி தெரிவித்தார். துணை சேர்மன் முருகன், கவுன்சிலர்கள் ரவி, குலசேகரன், ஆப்ரகாம், ஏழுமலை, விஜயராகவன், ஜெயஸ்ரீ, காந்தாமணி, சித்ரா, பொற்கலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.