/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிரைண்டரில் பதுங்கிய கருநாக பாம்பு மீட்புகிரைண்டரில் பதுங்கிய கருநாக பாம்பு மீட்பு
கிரைண்டரில் பதுங்கிய கருநாக பாம்பு மீட்பு
கிரைண்டரில் பதுங்கிய கருநாக பாம்பு மீட்பு
கிரைண்டரில் பதுங்கிய கருநாக பாம்பு மீட்பு
ADDED : ஆக 24, 2011 12:52 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் வீட்டுக்குள் புகுந்து கிரைண்டரில் பதுங்கிய ஏழு அடி நீளமுள்ள கொடிய விஷமுள்ள கருநாகபாம்பை வனத்துறையினர் பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.
கிருஷ்ணகிரி ராஜிவ் நகரில் வசிப்பவர் சலாமத். இவர் திருப்பூரில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி நிலவர் நிஷா. இவர் தனது மூன்று குழந்தைகளுடன் ராஜிவ் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு வெளியில் காலியாக உள்ள இடத்தில் சுமார் ஏழு அடி நீளமுள்ள பாம்பு உள்ளதை நிலவர் நிஷா பார்த்து சத்தம் போட்டுள்ளார். அப்போது, பாம்பு நிலவர் நிஷாவின் வீட்டுக்குள் புகுந்தது. அதிர்ச்சியடைந்த அவரது குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி விட்டனர். இது குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நிலவர் நிஷாவின் வீட்டுக்கு புகுந்து அங்கிருந்த பொருட்களை அகற்றி பாம்பை தேடினர். அரை மணி நேரம் தேடியும் வீட்டுக்குள் பாம்பு தென்படாதா நிலையில் வீட்டில் இருந்த கிரைண்டரை சாய்த்தனர். அப்போது, கிரைண்டருக்கு அடிப்பகுதியில் உள்ள மோட்டாரை சுற்றிக்கொண்டு பாம்பு இருந்தது தெரிந்தது. அந்த பாம்பு கொடிய விஷமுள்ள கருநாகபாம்பு என்பதும் தெரிந்தது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கிருஷ்ணகிரி வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையை சேர்ந்த கணபதி, பன்னீர் செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிரைண்டருக்குள் பதுங்கி இருந்த கொடிய விஷமுள்ள கருநாகபாம்பை உயிருடன் பிடித்து தொகரப்பள்ளி காப்புக்காட்டில் விட்டனர். கடந்த ஒரு மாதத்திற்கு முன் இதே பகுதியில் உள்ள வீட்டில் சாரைபாம்பு ஒன்று புகுந்துள்ளது. தொடர்ந்து இந்த பகுதியில் குடியிருப்பு பகுதியில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதால் அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் பீதியடைந்துள்ளனர்.