உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்துப் போட்டி: வைகோ
உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்துப் போட்டி: வைகோ
உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்துப் போட்டி: வைகோ
ADDED : செப் 17, 2011 10:50 PM

மதுரை: ''உள்ளாட்சித் தேர்தலில் ம.தி.மு.க., தனித்து போட்டியிடும்,'' என அதன் பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
ஈ.வெ.ரா., பெரியார் பிறந்தநாளையொட்டி நேற்று மதுரையில் அவரது சிலைக்கு வைகோ மாலை அணிவித்தார்.
நகர செயலாளர் பூமிநாதன், அவைத் தலைவர் சின்னச்செல்லம், மாநில தொழிற்சங்க செயலாளர் மகபூப்ஜான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின் வைகோ கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலில் ம.தி.மு.க., தனித்துப் போட்டியிடும். கூடங்குளம் அணுமின் நிலையத்தை எதிர்த்து பலர் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் 127 பேர் நிலைமை நகவலைக்கிடமாக உள்ளது. ''அணுமின் நிலையத்தால் ஆபத்து இல்லை. கடல் மட்டத்தைவிட 7.5 மீ., உயரத்தில் உள்ளது,'' என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். சுனாமி பேரலை 15 மீ., உயரம் வரை பாயும் என்பதால் கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பானது என கூற முடியாது. அணுமின் நிலையத்தால், கூடங்குளத்திற்கு மட்டுமல்ல தென்தமிழகத்திற்கு பாதுகாப்பு இல்லை என்ற அச்சத்தில் மக்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். ராஜிவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட மூவரது தூக்கு தண்டனையை, தமிழக சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.