/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/இலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கைஇலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை
இலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை
இலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை
இலவச ஆடு, மாடுகளுக்கு முறையாக தீவனம் கிடைக்க அரசு நடவடிக்கை
சிவகங்கை : இலவச கறவை மாடு, ஆடுகளுக்கு தீவனங்கள் முறையாக கிடைக்கிறதா என கண்காணிக்க, மாவட்டந்தோறும் குழு அமைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு: இத்திட்டம் முழுமையாக வெற்றியடைய, கறவை மாடுகளை, வட்டார அளவில் கால்நடை டாக்டர்கள் பரிசோதிக்கவேண்டும். மருத்துவ முகாம் நடத்தி, கண்காணிக்கவேண்டும். இதில் நோய் பாதித்த மாடுகளுக்கு இலவச மருந்துகள் வழங்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. கறவை மாடுகள் வளர்ப்பை ஊக்கப்படுத்துவதின் மூலம் பால் உற்பத்தி அதிகரித்து, ஆவினில் அதிகளவில் கொள்முதல் செய்யப்படும். இதற்கான தொகையை உடனே பயனாளிகளுக்கு வழங்குவது, இதன் மூலம் தமிழகத்தில் வெண்மை புரட்சியை ஏற்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. கால்நடைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்: உற்பத்தியை அதிகரிக்க தனி அலுவலர், மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உற்பத்தியாளர் சங்கங்களை சந்தித்து, ஆலோசனை வழங்கவேண்டும். கால்நடை தீவனங்கள் முறைப்படி கிடைக்கிறதா என கண்காணிக்கவேண்டும்.