/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மோப்பநாய் பிரிவில் தாசில்தார்கள் பயிற்சிமோப்பநாய் பிரிவில் தாசில்தார்கள் பயிற்சி
மோப்பநாய் பிரிவில் தாசில்தார்கள் பயிற்சி
மோப்பநாய் பிரிவில் தாசில்தார்கள் பயிற்சி
மோப்பநாய் பிரிவில் தாசில்தார்கள் பயிற்சி
ADDED : ஜூலை 15, 2011 12:37 AM
ஈரோடு: ஈரோடு மோப்பநாய் பிரிவில் பயிற்சி தாசில்தார்கள் நேற்று பயிற்சி பெற்றனர்.
திருட்டு, கொலை, கொள்ளை உட்பட குற்றங்களை ஆராய மோப்பநாய் பிரிவு நடைமுறையில் உள்ளது. அதனொரு பகுதியாக ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் மோப்ப நாய் பிரிவு செயல்படுகிறது. இங்கு ஒரு எஸ்.ஐ., தலைமையில் ஆறு போலீஸார் சுழற்சி முறையில் பணிபுரிகின்றனர். மோப்பநாய்க்கு பயிற்சி அளிக்கும் போலீஸாரும் இருவர் உள்ளனர். ஈரோடு துப்பறியும் நாய்ப்படை பிரிவகத்தில் விக்கி(5), ராக்கி(5), டைகர்(8), தாமரை(2) ஆகிய பெயர்களை கொண்ட நான்கு உயர்ரக நாய்கள் வளர்க்கப்பட்டன. 'விக்கி' என்ற மோப்பநாய் 'லேபர் டாக்' வகையையும், 'ராக்கி' என்ற மோப்பநாய் 'டாபர்மேன்' வகையையும், 'டைகர்' மற்றும் 'தாமரை' ஆகிய இரு மோப்பநாய்கள் 'ஜெர்மன் செப்பேடு' இனத்தையும் சார்ந்தது. விக்கி, டைகர், ராக்கி ஆகிய மோப்ப நாய்கள் 'க்ரைம்' பிரிவுக்காக வளர்க்கப்பட்டு வருகிறது. 'தாமரை' வெடிகுண்டு சோதனை பயிற்சிக்காக கோவை மோப்பாநாய் பயிற்சி மையத்துக்கு சென்றுள்ளது. ஈரோடு மோப்பநாய் பிரிவுக்கு பயிற்சி தாசில்தார்கள் ஆறு பேர் தங்கள் பணி தொடர்பான பயிற்சி பெற நேற்று வந்திருந்தனர். மோப்ப நாய் பிரிவின் செயல்பாடு, இப்பிரிவுடன் பிற துறையின் பணிகள், இத்துறையுடன் இணைந்த கைரேகை, டிராபிக் வார்டன் ஆகிய பிரிவுக்கு சென்று அவர்களது செயல்பாடுகள் மற்றும் வருவாய்த்துறையின் பங்களிப்பு குறித்து பயிற்சி பெற்றனர்.