இன்ஜினியரிங் விண்ணப்பம் நாளை வரை அனுமதி
இன்ஜினியரிங் விண்ணப்பம் நாளை வரை அனுமதி
இன்ஜினியரிங் விண்ணப்பம் நாளை வரை அனுமதி
ADDED : ஜூன் 10, 2024 05:16 AM

சென்னை: அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 450க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, 'ஆன்லைன்' கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, மே, 6 முதல் ஜூன் 6 வரை நடந்தது.
இதில், 2.49 லட்சம் பேர் விண்ணப்பம் பதிவு செய்து, 2.06 லட்சம் பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில், ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்கு, 2 நாட்கள் விண்ணப்ப பதிவு செய்ய சலுகை வழங்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும், www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்து, சான்றிதழ்களை பதிவேற்றலாம்.