ADDED : ஜூலை 15, 2011 01:03 AM
செஞ்சி : செஞ்சி தாலுகா சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் முனியன் (50).
விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் தனது தம்பி பாலுவுடன் (48) திருவண்ணாமலை மாவட்டம் மேக்களூரில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு நடந்து சென்றார். மேல்பாப்பாம்பாடி அருகே செஞ்சி நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் முனியன் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். நல்லாண் பிள்ளை பெற்றாள் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


