/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/மழைநீர் சேகரிப்பு வசதி இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி: கமிஷனர்மழைநீர் சேகரிப்பு வசதி இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி: கமிஷனர்
மழைநீர் சேகரிப்பு வசதி இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி: கமிஷனர்
மழைநீர் சேகரிப்பு வசதி இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி: கமிஷனர்
மழைநீர் சேகரிப்பு வசதி இருந்தால் மட்டுமே கட்டிட அனுமதி: கமிஷனர்
ADDED : ஜூலை 26, 2011 12:41 AM
பெரம்பலூர்: பெரம்பலூர் நகராட்சியில் பகுதியில் பொதுமக்கள் அனைவரும் மழை நீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்திட நகராட்சி கமிஷனர் சுரேஷ்ந்திரஷா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கட்டிடங்களிலும் ஏற்படுத்தியுள்ள மழைநீர் சேகரிப்புகளை புனரமைத்து அவற்றினை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், ஏற்கனவே பழுதடைந்து உபயோகமற்ற நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறுகள், பொது திறந்த வெளிக்கிணறுகள்ல மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை தனியார் பங்களிப்புடன் மழை நீர் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி குளங்கள் மற்றும் கட்டிடங்களில் மழைநீர்சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, நீர் ஆதாரங்களை தூர்வாரி, நிலத்தடி நீர் சேமிப்பு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரம்பலூர் நகராட்சி பகுதிகளில் புதிய கட்டிடங்களில் கட்டாயமாக மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு புதிய கட்டிடங்களில் அமைக்கப்பட வேண்டும். வரைப்பட அனுமதி கோரும் விண்ணப்பங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டிருந்தால் தான் கட்டிட அனுமதி வழங்கப்படும். எனவே, பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், வணிக நிறுவன கட்டிடங்கள் மற்றும் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை புனரமைத்து உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.