ராஜாவின் வாதத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள கூடாது: கபில் சிபல்
ராஜாவின் வாதத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள கூடாது: கபில் சிபல்
ராஜாவின் வாதத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள கூடாது: கபில் சிபல்
ADDED : ஜூலை 25, 2011 08:36 PM
புதுடில்லி : கோர்ட்டில் ராஜாவின் வாதத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என மத்திய அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜா, ஸ்பெக்ட்ரம் தொடர்பாக நடந்த ஒதுக்கீடுகள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போது நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்திற்கு தெரியும் என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மன்மோகன் சிங் மற்றும் சிதம்பரம் உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் கபில் சிபல், கோர்ட்டில் ராஜா எடுத்து வைத்த வாதத்தின் அடிப்படையில் பிரதமர் பதவி விலக சொன்ன பா.ஜ., தலைவரின் கருத்துக்கள் எதிர்பாராதது. இதனை கூறுவதற்கு முன்னர் அவர் அருண் ஜெட்லி அல்லது மூத்த வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்டிருக்க வேண்டும். ராஜாவின் வாதத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது. எதிர்கட்சியினருக்கு வேறு எந்த விவகாரமும் கிடைக்கவில்லை. பார்லிமென்ட் கூட்டத்தொடரை இடையூறு செய்வதற்காக இந்த விவகாரத்தை அவர்கள் இந்த விவகாரத்தை எழுப்புகின்றனர் என கூறினார்.