/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/100 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணகிரி வீரர் சாதனை : கடந்த ஆண்டு சாதனையை முறியடித்தார்100 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணகிரி வீரர் சாதனை : கடந்த ஆண்டு சாதனையை முறியடித்தார்
100 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணகிரி வீரர் சாதனை : கடந்த ஆண்டு சாதனையை முறியடித்தார்
100 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணகிரி வீரர் சாதனை : கடந்த ஆண்டு சாதனையை முறியடித்தார்
100 மீட்டர் ஓட்டத்தில் கிருஷ்ணகிரி வீரர் சாதனை : கடந்த ஆண்டு சாதனையை முறியடித்தார்
சிவகாசி : சிவகாசியில் நடந்து வரும் மாநில தடகள போட்டியில் ,நேற்று நடந்த 100 மீட்டர் ஓட்டத்தில் , கடந்த ஆண்டு சாதனையை கிருஷ்ணகிரி வீரர் அருண் முறியடித்தார்.
20 வயது ஆண்கள் பிரிவு 100 மீ., ஓட்டத்தில் சென்னை அருண்குமார், காஞ்சிபுரம் விருமாண்டி, சென்னை கிரண்பாபு, பெண்கள் பிரிவில் பெரம்பலூர் ஆர்த்தி, நாகபட்டினம் ஜான்சிராணி, காஞ்சிபுரம் ஜெயசர்மிலி,18 வயது ஆண்கள் பிரிவில் கோவை பிரவீன் முத்துக்குமார், காஞ்சிபுரம் விக்னேஷ், பெரம்பலூர் மோகன்குமார், பெண்கள் பிரிவில் திருவண்ணாமலை அர்ச்சனா, வனிதா, திருச்சி மரியபிலோமினாராணி ,16வயது ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி கார்த்திகேயன், சிவகங்கை சுதாகர், பாண்டி, பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் மோனிகா, திருநெல்வேலி ஈஸ்வரி, கோவை சரோன்நந்தா வெற்றி பெற்றனர்.
14வயது 100 மீ., ஓட்டத்தில் கிருஷ்ணகிரி அருண் ,திருவண்ணாமலை கார்த்திக், திண்டுக்கல் விஸ்வாசராஜ் முதல் மூன்று இடங்களை பிடித்தனர். இதில் கடந்த ஆண்டுநடந்த 14வயதுக்கு உட்பட்டோர் 100 மீ., ஓட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவர் கார்த்திகேயன் 11.7 வினாடியில் கடந்தார். தற்போது அருண் 1.4 வினாடியில் கடந்து முந்தைய சாதனையை முறியடித்துள்ளார். இதன் 100 மீட்டர் பெண்கள் பிரிவில், சென்னை ஸ்ரீஜா, கடலூர் பிரியங்கா, சேலம் சுதாஸ்ரீ வெற்றி பெற்றனர்.
18வயது பெண்கள் 400 மீ., தடை ஓட்டத்தில் சென்னை வைஷ்ணவி, காஞ்சிபுரம் ஜிஜி, திருச்சி மணிஷாசிவகாமி, 20 வயது பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் கவிதா, ஈரோடு நிவேதா, காஞ்சிபுரம் நாகேஷ்வரி, 18 வயது ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி சுதர்சன், திருநெல்வேலி மெர்வின், கிருஷ்ணகிரி கார்த்திக், 20வயது ஆண்கள் பிரிவில் கிருஷ்ணகிரி ராமச்சந்திரன், திருச்சி சந்திரகுமார், விருதுநகர் ஜியாவுதீன், 20 வயது பெண்கள் பிரிவு மும்முறை தாண்டுதலில் காஞ்சிபுரம் மஞ்சுகா, சுகன்யா, நாகபட்டினம் வைஷ்ணவி. ஆண்கள்பிரிவில் காஞ்சிபுரம் ராஜசேகர், மதுரை விக்னேஷ்வர், கோவை விஷ்ணுபிரசாத், 14வயது ஆண்கள் பிரிவு நீளம் தாண்டுதலில் திருச்சி சின்னாதேவன், சிவகங்கை ராஜேஷ் கண்ணன், நாமக்கல் ராஜா,, 14 வயது பெண்கள் பிரிவு உயரம் தாண்டுதலில் காஞ்சிபுரம் கனிமொழி, கடலூர் தேவி, ஈரோடு ஸ்ரீவித்யா,, 20வயது பெண்கள் பிரிவு வட்டு எரிதலில் காஞ்சிபுரம் குமாரி, மதுபிரியா, சிவகங்கை குணசுந்தரி. 16வயது ஆண்கள் பிரிவு ஈட்டி எரிதலில் கிருஷ்ணகிரி விவேக்ராஜ், திருச்சி புரு÷ஷாத்தமன், ரஞ்சித் கண்ணன் வெற்றி பெற்றனர்.


