ADDED : செப் 25, 2011 10:00 PM
ராஜபாளையம்:ராஜபாளையத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கோயில்களில்
நவராத்திரிவிழா நாளை துவங்குகிறது.பெத்தவநல்லூரில் உள்ள மாயூரநாத சுவாமி
கோயிலில் நவராத்திரி விழாவிற்கான ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி வேல்முருகன்
மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
புதுப்பாளையம் கோதண்டராமஸ்வாமி
கோயிலில் ஸ்ரீமன் நாராயணன் அலங்காரத்துடன் விழா துவங்குகிறது. அக்.6ல்
விஜயதசமி பாரிவேட்டையுடன் விழா முடிகிறது. தென்காசி ரோட்டில் உள்ள சொக்கர்
கோயிலில் அம்மன் ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் மங்கள இசையுடன் விழா
துவங்குகிறது. அக்.6ல் மீனாட்சி கல்யாண அலங்காரத்துடன், பி.ஏ.சி.ராமசாமி
ராஜா இசைபள்ளி ஆசிரியர் மற்றும் மாணவிகளின் இசை நிகழ்ச்சியுடன் விழா
முடிகிறது.