Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சு

மண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சு

மண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சு

மண் புழுக்கள், உரங்களை வாங்குவதற்கு விவசாயிகளிடம் தயக்கம் நிலவுகிறது: பேராசிரியர் பேச்சு

ADDED : ஆக 01, 2011 01:27 AM


Google News

திண்டிவனம் : விவசாயிகள் மண் புழுக்கள் மற்றும் உரங்களை விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்டி வருவதாக பேராசிரியர் ராமமூர்த்தி தெரிவித்தார்.மண்புழு உரம் தயாரித்தல் பற்றி வேளாண்மை உதவி இயக்குனர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் திண் டிவனத்தில் நடந்தது.

திருவண் ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதவி வேளாண்மை இயக்குனர்களுக்கு சில்பாலின் பைகளில் மண்புழு உரம் தயாரித்தல் தொடர்பான ஒரு நாள் முகாம் நடந் தது. திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தில் நடந்த முகாமில் தயாரிப்பு செயல் விளக்கமும், பயிற்சி வகுப்பும் நடந்தது. முகாமில் திட்ட விஞ்ஞானி முனைவர் அன்புமணி செயல்முறை விளக்கம் அளித்தார். உலக வங்கியின் நிதி உதவியுடன் நடைபெறும் நிலவள நீர் வள திட்டம் குறித்து ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ராமமூர்த்தி விளக்கினார்.



முகாமில் பேராசிரியர் ராமமூர்த்தி பேசியதாவது: இந்த திட்டம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது. விவசாயிகள் மண் புழுக்கள் மற்றும் உரங்களை விலை கொடுத்து வாங்க தயக்கம் காட்டி வருகின்றனர். அதனால் வேளாண்மை உதவி இயக்குனர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது.இதன் மூலம் விவசாயிகளுக்கு முழு விளக்கமும், செயல் முறையும் செய்து காட்டி, தயாரிப்பதற்கு ஊக்கம் அளிக்கப்படும். சிறிய முதலீட்டில் தங்களுடைய நிலத்திற்கு தேவையான அளவு உரத்தை தயாரித்துக் கொள்ள முடியும். வியாபார நோக்கத்திலும் அதிக பயன் பெற முடியும். ஒரு டன் கால்நடை கழிவுகள், தழைகள் ஆகியவற்றிலிருந்து 600 கிலோ மண்புழு உரம் கிடைக்கும். ஒரு டன் கழிவுப் பொருட்களுக்கு ஒரு கிலோ மண் புழு மட்டும் போதுமானது. இந்த முறையில் 45 நாட்களில் பல கிலோ மண் புழு உற்பத்தியாகும். மண்புழு ஒரு கிலோ 300 ரூபாய்க்கு விற்று லாபம் பெறலாம். இதற்கு மொத்தம் 800 ரூபாய்தான் செலவு ஏற்படும்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us