ADDED : செப் 16, 2011 01:37 AM
தென்காசி : மேலகரத்தில் ஆட்டோ-வேன் மோதலில் பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.
குற்றாலம் குடியிருப்பை சேர்ந்தவர் கருப்பசாமி (29). ஆட்டோ டிரைவர். இவர் மேலகரத்தில் ஆட்டோ ஓட்டி சென்றார். ஆட்டோவில் மற்றொரு ஆட்டோ டிரைவர் கார்த்திக்குமார் (20) இருந்தார். அப்போது அவ்வழியே வந்த தூத்துக்குடியை சேர்ந்த வேன் ஒன்று திடீரென ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த இருவரும், வேனில் இருந்த ஒரு பெண்ணும் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலர் இம்மானுவேல் தலைமையில் ஏட்டு வெள்ளைச்சாமி, மாரியப்பன், கணேசன், சாமி, மாதவன், சிவக்குமார், இசக்கிபாண்டி விரைந்து சென்று படுகாயமடைந்த மூவரையும் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். இச்சம்பவம் பற்றி குற்றாலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சிவன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


