/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகரில் மாதாந்திர விளையாட்டு போட்டி குண்டு எறிதலில் வி.வி.வி., கல்லூரி முதலிடம்விருதுநகரில் மாதாந்திர விளையாட்டு போட்டி குண்டு எறிதலில் வி.வி.வி., கல்லூரி முதலிடம்
விருதுநகரில் மாதாந்திர விளையாட்டு போட்டி குண்டு எறிதலில் வி.வி.வி., கல்லூரி முதலிடம்
விருதுநகரில் மாதாந்திர விளையாட்டு போட்டி குண்டு எறிதலில் வி.வி.வி., கல்லூரி முதலிடம்
விருதுநகரில் மாதாந்திர விளையாட்டு போட்டி குண்டு எறிதலில் வி.வி.வி., கல்லூரி முதலிடம்
ADDED : செப் 21, 2011 11:28 PM
விருதுநகர் : விருதுநகரில் நடந்த மாதாந்திர விளையாட்டுபோட்டி குண்டு எறிதலில், வன்னியப்பெருமாள் கல்லூரி மாணவி ஏ.ராஜலட்சுமி முதலிடம் பெற்றார்.விருதுநகர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டு அரங்கில் மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடந்தன.
ஆண்கள் பிரிவு 100 மீ. ஓட்டத்தில் சிவகாசி அஞ்சா கல்லூரி மாணவர் பாலகுமார், 400 மீ. ஓட்டத்தில் சிவகாசி அஞ்சா கல்லூரி மாணவர் கே.செல்வக்குமார், 1500 மீ. ஓட்டத்தில் ஏ.ஜி.பி., கல்லூரிமாணவர் டி.கண்ணன், 5000. மீ.ஓட்டத்தில் செந்திக்குமார நாடார் கல்லூரி மாணவர் கே.விக்னேஷ்வரன், நீளம் தாண்டுதலில் ஏ.ஜி.பி., கல்லூரிமாணவர் டி.அருஞ்சனை செல்வம் முதலிடம் பெற்றனர். உயரம் தாண்டுதலில் கலசலிங்கம் ஐ.டி.ஐ., மாணவர் எஸ்.மாணிக்கம் குண்டு எறிதலில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரிமாணவர் எஸ்.ஜெய்சிங் வட்டு எறிதலில் அஞ்சா கல்லூரி மாணவர் கே.தங்கபாண்டியன்முதலிடம் பெற்றனர். பெண்கள் பிரிவு100 மீ. ஓட்டத்தில் விருதுநகர் வன்னியப்பெருமாள் கல்லூரி மாணவி எஸ். கணேஷ்வரி, 400 மீ. ஓட்டத்தில் வன்னியப்பெருமாள் கல்லூரிமாணவி பி.இனியா. 800 மீ. ஓட்டத்தில் வன்னியப்பெருமாள் கல்லூரி மாணவி பி.இனியா, 3000மீ. ஓட்டத்தில் டி.பி.என்.எம்., பள்ளி மாணவிஆர்.கற்பக லட்சுமி, நீளம் தாண்டுதலில் வன்னியப்பெருமாள் கல்லூரிமாணவி பி.இனியா,உயரம் தாண்டுதலில் காளீஸ்வரி கல்லூரி மாணவிஎன்.பிருந்தாதேவிகுண்டு எறிதலில் வன்னியப் பெருமாள் கல்லூரிமாணவி ஏ.ராஜலட்சுமி, வட்டு எறிதலில் வன்னியப்பெருமாள் கல்லூரி மாணவி ஏ.ராஜலட்சுமிமுதலிடம் பெற்றனர்.