ஊத்துமலை கோவில் பாதையில்மினிபஸ் கவிழ்ந்து ஒருவர் பலி
ஊத்துமலை கோவில் பாதையில்மினிபஸ் கவிழ்ந்து ஒருவர் பலி
ஊத்துமலை கோவில் பாதையில்மினிபஸ் கவிழ்ந்து ஒருவர் பலி
ADDED : ஜூலை 24, 2011 04:31 AM
சேலம் : சேலம், ஊத்துமலை முருகன் கோவில் மலைப் பாதையில், மினி பஸ் கவிழ்ந்ததில், ஒருவர் பலியானார்; 15 பேர் காயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள பேளூரை சேர்ந்த 15 பேர், நேற்று, ஊத்துமலை முருகன் கோவிலுக்கு, மினி பஸ்சில் வந்தனர். வழிபாடு முடிந்து, அங்கிருந்து புறப்பட்டனர். மினி பஸ்சை டிரைவர் மணி, 30, ஓட்டினார். மலைப்பாதையில் இறங்கும் போது, மினி பஸ் பழுதாகியிருப்பது தெரிந்து, பஸ் டிரைவர், மலைப்பாதையில் சாமர்த்தியமாக இயக்கினார்.
மலைப்பாதையின் கடைசி வளைவு அருகே வந்த போது, பஸ் நிலைதடுமாறி, தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. காயமடைந்தவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பேளூரை சேர்ந்த கோவிந்தராஜ், 70, சிகிச்சை பலனின்றி இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.