சிறையில் இருந்து வெளியே வந்தார் ஹசாரே
சிறையில் இருந்து வெளியே வந்தார் ஹசாரே
சிறையில் இருந்து வெளியே வந்தார் ஹசாரே
ADDED : ஆக 19, 2011 11:43 AM
புதுடில்லி: 4 நாட்கள் சிறைவாசத்திற்குப்பின், திகார் சிறையில் இருந்து இன்று காலை அன்னா ஹசாரே வெளியே வந்தார்.
வலிமையான லோக்பால் மசோதா கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற காந்தியவாதி அன்னா ஹசாரே போலீசாரால் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் வைக்கப்பட்டார். இதனிடையே ஹசாரே கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அவர் விடுவிக்கப்பட்டார். ஆனால் சிறையில் இருந்து வெளிவர சில நிபந்தனைகளை விதித்த ஹசாரே, உண்ணாவிரதப்போராட்டத்திற்கு ராம்லீலா மைதானத்தை வழங்க டில்லி போலீசார் ஒப்புக்கொண்டதால் சிறையை விட்டு வெளியே வர ஒப்புக்கொண்டார். இந்நிலையில், நேற்று ராம்லீலா மைதானம் உண்ணாவிரதப்போராட்டத்திற்கு தயாராகாத காரணத்தால், இன்று காலை அவர் சிறையிலிருந்து வெளியே வந்தார். சிறைவாசலில் ஆயிரக்கணக்கான மக்கள் அவரை வரவேற்றனர்.