ADDED : செப் 21, 2011 11:28 PM
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 105 பட்டாசு ஆலைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.உரிமம் இல்லாமல் கருந்திரி, பட்டாசு தயாரிப்பதை தடுக்க அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு ஆய்வு நடத்தி வருகிறது.
இதில், செப். 6 முதல் 19 ம் தேதி வரை விருதுநகர், சிவகாசி பகுதியில் 107 பட்டாசு ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டன. 105 ஆலைகளில் விதி மீறல் கண்டறியப்பட்டுள்ளன.
16 ஆலைகள் மீது நிரந்த உற்பத்தியினை தடை செய்யப்பட்டுள்ளது. 31 ஆலைகளில் மூன்று நாள் உற்பத்தி தடையும், 5 ஆலைகளுக்கு சுட்டிக்காட்டப்பட்ட குறைகளை திருத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 53 ஆலைகளுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ''விதி மீறல் செய்யும் பட்டாசு ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் மு.பாலாஜி தெரிவித்துள்ளார்.