பார்லி.யில் இதுவரை 34 சதவீத நேரம் வீணடிப்பு
பார்லி.யில் இதுவரை 34 சதவீத நேரம் வீணடிப்பு
பார்லி.யில் இதுவரை 34 சதவீத நேரம் வீணடிப்பு
ADDED : ஆக 19, 2011 02:12 AM
புதுடில்லி: ஒத்திவைப்பு,அமளி, துமளி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாராளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கையில் 34 சதவீத நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது. 39 நாட்கள் நடைபெறும் என்ற அறிவிப்போடு கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. கூட்டத்தொடர் முடிய இன்றும் 20 நாட்களே மீதமுள்ளது. பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவி்க்கப்பட்டிருந்தது. இதில் கடந்த 19 நாட்கள் நடந்த இரு அவைகளிலும் எந்தவித உருப்படியான காரியமும் நடக்கவில்லை. மாறாக அமளியால் நேரத்தை வீணடித்துள்ளனர் எம்.பி.க்கள். தெலுங்கானா விவகாரம், லோக்பால் மசோதா, கறுப்புபண விவகாரம், காமன்வெல்த் ஊழல், சுரேஷ்கல்மாடி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதும், அவையில் அமளி துளி ஏற்படுவதாக 34 சதவீத காலவிரையம் ஏற்பட்டுள்ளது. அதிலும் ராஜ்யசபாவின் நடவடிக்கைகள் 39 சதவீதம் அளவுக்கு எந்தவித முன்னேற்றமும் இன்றி வீணடிப்பு செய்யப்பட்டுள்ளது.
மொத்தம் 12 நாட்கள் கேள்வி நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் இரு அவைகளிலும் 7 நாட்கள் மட்டும் தான் கேள்வி நேரம் நடந்தது. மீதி 5 நாட்கள் அமளியால் நேரம் வீணாகிபோனது.. 32 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இவற்றில் 6 மட்டுமே பார்லி.யில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்தமுள்ள 39 நாட்கள் நடக்கவுள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தில் இதுவரை 34 சதவீதம் அனாமத்தாக நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.


