Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை

மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை

மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை

மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை

ADDED : ஆக 09, 2011 01:10 AM


Google News

சிவகங்கை : வருவாய் ஈட்டும் தாய், தந்தையரை இழந்த மாணவர்களுக்கு, சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர், கல்வி உதவி தொகை வழங்கினார்.

வருவாய் ஈட்டும் தாய்,தந்தையர் விபத்தில் இறந்தால், அவர்களது குழந்தைகளின் கல்வி தடைபடாமல் இருக்க அரசு, மாணவர் பெயரில் 50,000 ரூபாய் டெபாசிட் செய்கிறது. இதில் இருந்து கிடைக்கும் வட்டி தொகையில் கல்வி செலவு செய்யலாம். ஐந்து ஆண்டுகளுக்கு பின் மொத்த தொகையை எடுக்கலாம். உதவி தொகை: திருப்புவனம் அரசு மகளிர் பள்ளி முத்துலட்சுமி, மாரீஸ்வரி, சூசையப்பர்பட்டணம் சகாயராணி பள்ளி ஆரோக்கியலெவியான், கருமந்தக்குடி அரசு பள்ளி அஜீத், சீதா, சூர்யா, கல்லூரணி அரசு பள்ளி பவித்ரா, அரியாண்டிபுரம் போனிபாஸ் பள்ளி அருள்லென்சி, மானாமதுரை ஓ.வெ.செ., பள்ளி சதீஸ்குமார், மானாமதுரை அரசு மகளிர் பள்ளி புவனேஸ்வரி, முத்துரம்யா ஆகியோர் தேர்வாகினர். இவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய்க்கான டெபாசிட் தொகை ரசீதை, முதன்மை கல்வி அலுவலர் செல்லம் வழங்கினார். நேர்முக உதவியாளர்கள் சேக்கப்பன் (மேல்நிலை), மனோகரன் (உயர்நிலை), சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், உதவியாளர்கள் பாண்டி, முருகன் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us