தாய்லாந்து தாக்குதல்: கம்போடியாவை சேர்ந்த 29 பேர் படுகாயம்
தாய்லாந்து தாக்குதல்: கம்போடியாவை சேர்ந்த 29 பேர் படுகாயம்
தாய்லாந்து தாக்குதல்: கம்போடியாவை சேர்ந்த 29 பேர் படுகாயம்

அமைதி
தென்கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை தொடர்பான பிரச்னை நீடித்து வருகிறது. எல்லையில் உள்ள ஹிந்துக் கோவிலுக்கு இரண்டு நாடுகளுமே பரஸ்பர உரிமை கோருவதே பிரச்னைக்கு முக்கிய காரணம் ஆகும். நீண்ட காலமாக பிரச்னை இருந்த போதும், கடந்த மே மாதம் இரண்டு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
மோதல்
இந்நிலையில், இந்த பகுதியில் கம்போடிய பகுதியில் பன் நோங் யா கயேவ் என்ற கிராமத்தில் வசிக்கும் கிராம மக்கள் மற்றும் தாய்லாந்து ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், தாய்லாந்து ராணுவ வீரர்கள் கண்ணீர் புகை குண்டுகளையும், ரப்பர் புல்லட்களையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் கிராம மக்கள் மற்றும் புத்த மதத்துறவிகள் 29 பேர் காயமடைந்தனர்.
குற்றச்சாட்டு
இது தொடர்பாக தாய்லாந்து ராணுவம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நேற்று மாலை 3:40 மணியளவில், 200க்கும் மேற்பட்டோர் எல்லைப்பகுதியில் தடையை மீறி குவிந்தனர். நிலைமையை கட்டுப்படுத்த ரப்பர் புல்லட்கள் மற்றும் கண்ணீர் புகைகுண்டுகள் வீசப்பட்டது. கம்போடிய தரப்பினர் கற்கள், மரக்கட்டைகளை வீசினர். இதில் ராணுவ அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
கடிதம்
இதனிடையே, இந்த பிரச்னை தொடர்பாக ஐநா பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெசுக்கு கம்போடிய பிரதமர் ஹன் மனேட் கடிதம் எழுதியுள்ளார்.