Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/உள்ளாட்சி அமைப்பு பதவிக்கு இன்று முதல் விருப்ப மனு பெறப்படும்: அமைச்சர் சம்பத்

உள்ளாட்சி அமைப்பு பதவிக்கு இன்று முதல் விருப்ப மனு பெறப்படும்: அமைச்சர் சம்பத்

உள்ளாட்சி அமைப்பு பதவிக்கு இன்று முதல் விருப்ப மனு பெறப்படும்: அமைச்சர் சம்பத்

உள்ளாட்சி அமைப்பு பதவிக்கு இன்று முதல் விருப்ப மனு பெறப்படும்: அமைச்சர் சம்பத்

ADDED : செப் 01, 2011 11:48 PM


Google News

கடலூர் : கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் விருப்ப மனுக்கள் கடலூர் டவுன் ஹாலில் கொடுக்கலாம் என அமைச்சர் சம்பத் தெரிவித்துள்ளார்.

கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனுக்கள் பெறுவது குறித்து திட்ட அமலாக்க துறை அமைச்சர் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது: கடலூர் கிழக்கு மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய நகராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கும், அண்ணாகிராமம், பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர், நல்லூர் ஆகிய ஒன்றிய உறுப்பினர்கள் பதவிக்கும், மேல்பட்டாம்பாக்கம், துரைப்பாடி, வடலூர், குறிஞ்சிப்பாடி,கங்கைகொண்டான் ஆகிய பேரூராட்சிகளில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கும் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் இன்று முதல் கடலூர் டவுன் ஹாலில் அமைச்சர் சம்பத், செம்மலை எம்.பி., ஆகியோர் பெற்றுக்கொள்கின்றனர். இதில் நகராட்சி சேர்மன் பதவிக்கு 5000 ரூபாயும், கவுன்சிலர் பதவிக்கு 2000 ஆயிரமும்,பேரூராட்சி தலைவர் பதவிக்கு 2500 ரூபாயும், கவுன்சிலர் பதவிக்கு 500 ரூபாயும், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு 5000 ரூபாயும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2000 ஆயிரம் ரூபாயும் விருப்ப மனுக்களுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும். ஜெயலலிதா தனது ஆட்சியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவதன் மூலம் கல்வியில் புரட்சியும், மிக்ஸி,கிரைண்டர் வழங்குவதால் சமையலரை புரட்சியும், கலப்பின ஜெர்சி பசுக்கள் வழங்குவதன் மூலம் வெண்மை புரட்சியும், ஏற்படுத்தவுள் ளார். மேலும் இலவச வெள்ளாடு வழங்கும் திட்டத்தில் 30 சதவீதம் ஆதிதிராவிடர்களுக்கு வழங்குவதன் மூலம் ஆதிதிராவிடர்களுக்கு ஆதரவான அரசு செயல்படுகின்றது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

எனவே சட்டசபை தேர்தலை போல் உள்ளாட்சி அமைப்புகளிலம் அ.தி.மு.க., அமோக வெற்றி பெறும் என தெரிவித்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us