மோடி உண்ணாவிரதத்தில் பா.ஜ.மூத்த தலைவர்கள்
மோடி உண்ணாவிரதத்தில் பா.ஜ.மூத்த தலைவர்கள்
மோடி உண்ணாவிரதத்தில் பா.ஜ.மூத்த தலைவர்கள்
UPDATED : செப் 19, 2011 04:46 PM
ADDED : செப் 19, 2011 03:02 PM
ஆமதாபாத்: அமைதி, நல்லிணக்கம் வேண்டி குஜராத் முதல்வர் நரேந்திரமோடி தனது சாத்பவனா மிஷன் எனும் தலைப்பில் மூன்று நாள் உண்ணாவிரதத்தினை நிறைவு செய்கிறார்.
அவருக்கு வாழ்த்து தெரிவிக்க பா.ஜ. முன்னணி தலைவர்கள் , குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று மாலை 5.30 மணிக்கு தனது உண்ணாவிரதத்தினை நிறைவு செய்கிறார். இவருக்கு வாழ்த்து தெரிவித்து பேச , பாராளுமன்ற லோக்சபா எதிர்க்கட்சித்தலைவர் சுஷ்மா சுவராஜ், பா.ஜ. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு, எம்.பி. ஹேமாமாலினி, பாஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், மகாராஷ்டிரா நவநிர்மான் சேவா கட்சித் தலைவர் ராஜ்தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் அர்ஜூன்முண்டா ஆகியோர் வருகை தந்துள்ளனர்.