/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 27, 2011 01:29 AM
பாகூர் : சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தகோரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பாகூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பாகூர் கஸ்தூரிபாய் காந்தி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் மாணவ - மாணவிகள் ஒன்று கூடினர். பின், அங்கிருந்து பேரணியாக சென்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தலைவர் தமிழ்ச்செல்வன், செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பின், தாசில்தார் தயாளனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.