/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செயின் பறிப்பு வழக்கில் இரண்டு வாலிபர்கள் கைதுசெயின் பறிப்பு வழக்கில் இரண்டு வாலிபர்கள் கைது
செயின் பறிப்பு வழக்கில் இரண்டு வாலிபர்கள் கைது
செயின் பறிப்பு வழக்கில் இரண்டு வாலிபர்கள் கைது
செயின் பறிப்பு வழக்கில் இரண்டு வாலிபர்கள் கைது
ADDED : ஆக 11, 2011 03:59 AM
விழுப்புரம்:விழுப்புரத்தில் செயின் பறிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த
இருவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த ஆர்.பி., நகர்
ஆனந்து மனைவி ராணி கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிலிருந்து நடந்து
வந்தார். அப்போது சென்னை நெடுஞ்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம
நபர்கள், அவரது கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் தங்க செயினை பறித்துச்
சென்றனர்.இதே போல் விழுப்புரம் வாரியார் தோட்டத்தைச் சேர்ந்த மூதாட்டி
மீராபாய் என்பவரிடம் 8 சவரன் தங்க செயினை மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள்
பறித்துச் சென்றனர். விழுப்புரம் தாலுகா அலுவலகம் முன் நிறுத்தியிருந்த
ஆலாத்தூர் வீரமுத்து என்பவரின் மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள்
திருடிச் சென்றனர். விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து
குற்றவாளிகளை தேடி வந்தனர். இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், சப் இன்ஸ்பெக்டர்
சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சென்றபோது
முத்தாம்பாளையம் புறவழிச்சாலை அருகே மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களை
பிடித்து விசாரித்தனர்.இவர்கள் விழுப்புரம் தாமரைக்குளம் காலனி முனுசாமி
மகன் தென்னிலவன், 25, ஜீவா நகர் சிவலிங்கம் மகன் சிவராஜ், 24 என்பது
தெரிந்தது.
அவர்களிடம் விசாரித்ததில் ஆர்.பி., நகரில் செயினை அறுத்துச் சென்றதும்,
தாலுகா அலுவலகம் முன் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதையும்
ஒப்புக்கொண்டனர்.
தென்னிலவன், சிவராஜை கைது செய்த விழுப்புரம் தாலுகா போலீசார்
அவர்களிடமிருந்து 60 ஆயிரம் மதிப்பிலான தங்க நகை மற்றும் மோட்டார் சைக்கிளை
பறிமுதல் செய்தனர்.பின், இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர்.மேலும் செயின் பறிப்பு வழக்கில் தொடர்புடைய இவர்களது கூட்டாளியான
விழுப்புரம் வடக்கு ரயில்வே காலனியைச் சேர்ந்த வெங்கடேசனை, போலீசார் தேடி
வருகின்றனர்.