/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து : பெண் பலி; மூன்று பேர் காயம்விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து : பெண் பலி; மூன்று பேர் காயம்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து : பெண் பலி; மூன்று பேர் காயம்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து : பெண் பலி; மூன்று பேர் காயம்
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து : பெண் பலி; மூன்று பேர் காயம்
ADDED : ஆக 14, 2011 02:38 AM
விருதுநகர் : விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் 'விநாயகர் கலர் மேட்ச் ஒர்க்ஸ்' பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில், பெண் ஒருவர் பலியானார்.
ஆலை உரிமையாளர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.
விருதுநகர் அருகே ஆவுடையாபுரத்தில் சாத்தூர் சிந்தப்பள்ளியை சேர்ந்த வீராச்சாமிக்கு சொந்தமான 'விநாயகர் கலர் மேட்ச் ஒர்க்ஸ்' பட்டாசு ஆலை உள்ளது. இதில் 30 க்கும் மேற்பட்டோர் 10க்கும் மேற்பட்ட அறைகளில் 'கலர் மத்தாப்பு' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இங்குள்ள ஓரு அறையின் ரேக்கில், கருமருந்தில் முக்கி, காய வைத்த குச்சிகளை அடுக்கி வைத்திருந்தனர். இதை தீப்பெட்டியில் அடுக்கும் பணியில் நேற்று காலை 10.15 மணிக்கு பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது குச்சிகளிடையே ஏற்பட்ட உராய்வு காரணமாக, திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
இதில் ஆவுடையாபுரம் ராவியத் பீவி,50, சையதுல்பீவி,60, சுவேதாபீவி,50, கலர் மேட்ச் உரிமையாளர் வீராச்சாமி ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் விருதுநகர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை ஆஸ்பத்திரில் சேர்க்கப்பட்டனர். அங்கு ராவியத் பீவி இறந்தார்.
தீயணைப்பு துறையினர் கோட்ட அலுவலர் ராதா கிருஷ்ணன் தலைமையில் தீயை அணைத்தனர். அமைச்சர்கள் செல்லப்பாண்டியன், உதயகுமார், கலெக்டர் பாலாஜி சம்பவ இடத்தை பார்வையிட்டு, விருதுநகர் அரசு ஆஸ்பத்திரி சென்று காயம்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினர். வச்சகாரபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
முதலுதவி வசதி இல்லாத ஆலை : தீபாவரி பண்டிகை வருவதையொட்டி, இங்கு இரவு பகலாக பணி செய்ய அனைத்து அறைகளுக்கும் மின் வயரிங் செய்யப்பட்டுள்ளது. ஆனால், தீயணைப்பு கருவி, வெண்டிலேட்டர், முதலுதவி பெட்டி உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை.
குறிப்பாக வாளிகளில் தண்ணீர், மணல் கூட வைக்கவில்லை.இது போல் ஆலை அறைகளில் தரைவிரிப்புக்கு பயன்படுத்த வேண்டிய 3.5 எம்.எம்., கனத்துடன் கூடிய ரப்பர் சீட்டும் இல்லை. பணியாளர்கள் எவரும் காட்டன் ஆடை உடுத்தியிருக்கவும் இல்லை. ஆலை பற்றிய தகவல் பலகையும் இல்லை. இது போன்றுபல ஆலைகள் செயல்படும் நிலையில், அதிகாரிகளும் கண்டுகொள்ளாததால் விபத்துக்களும் தொடர்கின்றன.