காதி பொருட்களை விற்க தனியாரை நாட திட்டம்
காதி பொருட்களை விற்க தனியாரை நாட திட்டம்
காதி பொருட்களை விற்க தனியாரை நாட திட்டம்
ADDED : ஆக 11, 2011 11:17 PM
புதுடில்லி: தனியார் ஒத்துழைப்புடன் புதிய காதி விற்பனை மையங்களைத் துவக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் வீர்பத்ர சிங் கூறுகையில், ''தற்போது செயல்படும் காதி விற்பனை மையங்கள், வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இல்லை.
காதி விற்பனை மையங்களில் விற்கப்படும் பொருட்கள், நடப்பு சந்தை நிலவரத்திறகு ஏற்ப இல்லை என, தெரிய வந்துள்ளது. இதையடுத்து, காதி பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்கும் வகையில், டில்லி, சென்னை உட்பட பெருநகரங்களில் தனியார் ஒத்துழைப்புடன் புதிதாக காதி விற்பனை மையங்கள் திறக்கப்பட உள்ளன,'' என்றார்.