1.50 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை : மூன்று கட்டமாக கணக்கெடுப்பு பணி
1.50 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை : மூன்று கட்டமாக கணக்கெடுப்பு பணி
1.50 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை : மூன்று கட்டமாக கணக்கெடுப்பு பணி
சிவகாசி : வேளாண் அடையாள அட்டைகளை 1.50 லட்சம் விவசாயிகளுக்கு வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகள் மூன்று கட்டமாக நடந்து வருகிறது.
இதன் புள்ளி விபரங்களின் அடிப்படையில், விவசாயிகளுக்கு போட்டோவுடன் கூடிய வேளாண் அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதன் மூலம் வங்கி கடன், பயிர் கடன், மானியம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை விவசாயிகள் சிரமம் இன்றி பெறமுடியும். ஒரு பிளாக்கில் உள்ள விவசாயிகளை மூன்றாக பிரித்து ஒன்று, இரண்டு, மூன்று கட்டங்களாக கணக்கெடுக்கப்படுகிறது.
முதல் கட்டத்தில் மாவட்டத்திற்கு 5000 பேர் வீதம், மாநிலம் முழுவதும் 1.50 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்க அரசு திட்டமிட்டுள்ளதால், தற்போது அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இப்பணி இன்னும் ஓரிருவாரங்களில் நிறைவு பெற உள்ளது. விவசாயிகளிடம் பெறும்புள்ளி விபரங்கள் வேளாண் துறை இணைய தளத்திலும் அப்டேட் செய்யப்படுகிறது.
வேளாண் அதிகாரி ஒருவர் கூறுகையில்,'' கணக்கெடுப்பிற்கு செல்லும் அலுவலர்களுக்கு, சில கிராமங்களில் விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. அதனால் விவசாயியின் போட்டோ, நிலத்தின் சர்வே எண், மண் மாதிரி விபரங்கள் பெறுவதில் அலுவலர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. விவசாயிகள் ஒத்துழைப்பு வழங்கினால் அடையாள அட்டை பெற்று பயன்பெறலாம்,'' என்றார்.


