Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேளாண் உபகரணங்கள் கையாளும் முறை மாவட்ட தொழில் மையத்தில் பயிலரங்கு

வேளாண் உபகரணங்கள் கையாளும் முறை மாவட்ட தொழில் மையத்தில் பயிலரங்கு

வேளாண் உபகரணங்கள் கையாளும் முறை மாவட்ட தொழில் மையத்தில் பயிலரங்கு

வேளாண் உபகரணங்கள் கையாளும் முறை மாவட்ட தொழில் மையத்தில் பயிலரங்கு

ADDED : ஆக 11, 2011 02:54 AM


Google News
புதுச்சேரி:உற்பத்தியைப் பெருக்குவதற்கான உபகரணங்களைக் கையாளும் முறை குறித்த ஒரு நாள் பயிலரங்கு நேற்று நடந்தது.புதுச்சேரி மேலாண்மை மற்றும் உற்பத்தித் திறன் குழு, தேசிய சிறுதொழில் வளர்ச்சிக் கழகம் இணைந்து 'உற்பத்தியைப் பெருக்குவதற்கான உபகரணங்களைக் கையாளும் முறை' குறித்த பயிலரங்கை மாவட்டத் தொழில் மைய கருத்தரங்க வளாகத்தில் நேற்று நடத்தியது.மாவட்டத் தொழில் மைய தொழில் நுட்ப அதிகாரி ராமகிருஷ்ணன் வரவேற்றார்.

தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் வல்லவன் முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.தேசிய சிறுதொழில் கழக மேலாளர் ரங்கநாதன் வாழ்த்தி பேசினார். மாவட்டத் தொழில் மைய இயக்க மேலாளர் அகஸ்டின் லூசியன் தியாகு கடன் பெறும் முறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.பயிலரங்கில், பாஸ்க் டூல்ஸ் நிறுவன வாகனம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. இதில் நிறுவனத்தில் உள்ள அனைத்து வாகனங்களின் செயல்பாடுகளும் வீடியோ மூலம் விளக்கம் அளிக்கப்பட்டது. பயிற்சியை பயிற்சி பொறுப்பாளர் விவேக் ரமணி, சேவை மேலாளர் அறிவரசன், விற்பனை மேலாளர் சஹீன் ஹரீஷ் ஆகியோர் அளித்தனர். இப்பயிலரங்கில் ஒருங்கிணைந்த இரும்பு மற்றும் மரத்திலான அறைகலன்கள் உற்பத்தியாளர்கள் சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் தொழிலாளர்கள் 35 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். திட்ட ஒருங்கிணைப்பாளர் ஞானமுத்து நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us