ஜூன் மாதத்தில் உள்நாட்டு வாகன விற்பனை அதிகரிப்பு
ஜூன் மாதத்தில் உள்நாட்டு வாகன விற்பனை அதிகரிப்பு
ஜூன் மாதத்தில் உள்நாட்டு வாகன விற்பனை அதிகரிப்பு
ADDED : ஜூலை 11, 2011 01:42 PM
புதுடில்லி : ஜூன் மாதத்தில் உள்நாட்டில் கார் மற்றும் இரு சக்கர வாகன விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.
கடந்த மாதத்தில் கார் விற்பனை 1.62 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஒரு மாதத்தில் 1,43,370 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 1,41,087 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ஜூன் மாத்தில் இருசக்கர வாகன விற்பனை 14.97 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் நாடு முழுவதும் 8,25,323 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கனரக வாகன விற்பனையும் 17.83 சதவீதம் உயர்ந்துள்ளது.