ADDED : செப் 18, 2011 09:37 PM
சேத்தியாத்தோப்பு:கடலூர் லயன்ஸ் கிளப் ஆப் ஏன்ஷியன்ட் மற்றும் சந்திரா
பெண்கள் மேல்நிலைப் பள்ளி நடத்திய கண்தான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சங்கத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். கண்தான மாவட்டத் தலைவர்
திருமலை, தலைமையாசிரியர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பாரி வள்ளல்
வரவேற் றார். மண்டலத் தலைவர் அறிவொளி ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
மாவட்டத் தலைவர் சண்முகம், பொற்செல்வி சேத்தியாத்தோப்பு சுப்ரீம் லயன்
சங்க நிர்வாகிகள் அசோக், அரங்கப்பன், ராதாகிருஷ்ணன், கிருஷ்ணமூர்த்தி உட்பட
பலர் பேசினர்.சந்திரா பெண்கள் மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் துவங்கிய
ஊர்வலம் பஸ் நிலையம், கடைவீதி, காமராஜ் வாய்க்கால்சாலை உள்ளிட்ட முக்கிய
வழியாக சென்று பள்ளியை அடைந்தது.