மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 2 வெளிநாட்டவர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 2 வெளிநாட்டவர் கைது
மும்பை விமான நிலையத்தில் ரூ.19 கோடி மதிப்பு தங்கம் பறிமுதல்: 2 வெளிநாட்டவர் கைது
UPDATED : ஜூன் 10, 2024 05:30 PM
ADDED : ஜூன் 10, 2024 04:45 PM

மும்பை: மும்பை விமான நிலையத்தில் 19 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. விமானத்தில் பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதிகாரிகளை கண்டு, 2 வெளிநாட்டவர்கள் ஓடி மறைந்துள்ளனர். இதையடுத்து இரண்டு பேர் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது, அவர்களிடம் இருந்து ரூ.19 கோடி மதிப்புள்ள 32.79 கிலோ தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இருவரையும் கைது செய்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு பெண் பயணிகளும் உள்ளாடைகள் மற்றும் பைகளில் தங்கத்தை மறைத்து வைத்து, கடத்த முயற்சி செய்துள்ளனர்.