"சோலார்' மின் கட்டணம் குறையும் : அமைச்சர் பரூக் அப்துல்லா உறுதி
"சோலார்' மின் கட்டணம் குறையும் : அமைச்சர் பரூக் அப்துல்லா உறுதி
"சோலார்' மின் கட்டணம் குறையும் : அமைச்சர் பரூக் அப்துல்லா உறுதி

புதுடில்லி : சூரிய சக்தியின் மூலம் கிடைக்கும் மின்சாரக் கட்டணம் 2013ல் குறையும் என, மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
இந்த விளக்குகள் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் விலை, ஒரு யூனிட் 18 ரூபாயாக இருந்தது. பின்னர் இந்த மின்சாரத்தின் விலை, ஒரு யூனிட் 11 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளது. வரும் 2013ல் இந்த விலை குறையும். வரும் 2022ல், 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் சூரிய சக்தியின் மூலம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, சூரிய சக்தி விளக்குகள் மூலம் 1,300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
சூரிய சக்தி விளக்குகள் தயாரிக்கும் நிறுவனங்கள், வெளிநாட்டிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமாக, இந்த நிறுவனங்கள் உள்நாட்டிலேயே உபகரணங்களை உற்பத்தி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பரூக் அப்துல்லா கூறினார்.